உலக அளவில் மிகப்பெரிய ஆன்லைன் ஷாப்பிங் தளமாக அமேசான் நிறுவனம் இருக்கிறது. இந்த நிறுவனம் தற்போது ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி நடப்பாண்டு முதல் ட்ரோன் உதவியுடன் பொருட்களை டெலிவரி செய்யும் என்று அறிவித்துள்ளது. இந்த ஏர் டெலிவரி ட்ரோனுக்கு MK30 என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த ட்ரோன் தற்போது இருக்கும் ட்ரோன்களை விட 25 சதவீதம் சத்தம் குறைவாக இருக்குமாம்.
அதன்பின் புதிதாக அறிமுகப்படுத்தப்படும் ட்ரோன் வானத்தில் 100 அடியில் 5 பவுண்டு எடையை தாங்கக் கூடியதாகும். வானத்தில் ஆபத்து இருந்தாலும் கூட இந்த போன்களில் அமைக்கப்பட்டுள்ள ட்ரோன் டிசைன்கள் மூலம் பொருட்கள் பாதுகாப்பானதாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த ட்ரோன் அமெரிக்காவில் உள்ள பெடரல் அவியேஷன்ஸ் அட்மினிஸ்ட்ரேஷன் நிறுவனத்தில் சோதனை செய்யப்பட்டு பிறகு நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ட்ரோன் வசதியோடு பலதூரம் வரை பயணங்களை மேற்கொள்ள முடியும் என்றும், விலங்குகள் மற்றும் மனிதர்களுக்கு ஆபத்து இல்லாத பயணமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது. மேலும் இந்தத் திட்டம் கலிபோர்னியா, டெக்ஸாஸ் ஆகிய மாகாணங்களில் முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு பின் அமெரிக்கா முழுவதும் விரிவுபடுத்தப்படும். அதன்பின் வருகிற 2225-ம் ஆண்டுக்குள் உலகம் முழுவதும் அறிமுகப்படுத்தப்படும் என்று அமேசான் கூறியுள்ளது.