Categories
Uncategorized அரசியல் மாநில செய்திகள்

சூப்பர்னும் சொல்லலாம்…! சரியில்லைனும் சொல்லலாம்…. பாமக சொன்ன பட்ஜெட் தகவல் ..!!

தமிழக அரசு தாக்கல் செய்த பட்ஜெட் வரவேற்க கூடிய நிதிநிலை அறிக்கை ஆகவும், எதிர்பார்த்த வகையில் இல்லாத நிதிநிலை அறிக்கை ஆக இருப்பதாக பாமக தலைவர் ஜிகே மணி தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு தாக்கல் செய்த பட்ஜெட் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாமகவின் தலைவர் ஜிகே மணி, சட்டமன்றப் பேரவையில் நிதிநிலை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2020 -21 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட நிதிநிலை அறிக்கை நிதி அமைச்சர் அவர்களால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிதி நிலை அறிக்கை 280 பகுதிகளைக் கொண்டதாக உள்ளது. ஏறக்குறைய மூன்று மணி இரண்டு நிமிடம் வாசித்துள்ளார். பெரிய நீண்ட இந்த நிதிநிலை அறிக்கையில் மகளிர் சுய உதவி குழு கடன் தள்ளுபடி, பாசனத் திட்டங்களுக்கு மேம்படுத்துவோம், காவிரி – கோதாவரி இணைப்பு திட்டத்துக்கு மத்திய அரசை வலியுறுத்துவோம்,

தர்மபுரி – திருவண்ணாமலை -விழுப்புரம் போன்ற பல மாவட்டங்களில் சிப்காட் விரைந்து செயல்படுத்தப்படும் உட்பட பல்வேறு அம்சங்கள் சொல்லப்பட்டிருக்கிறது. இவைகளெல்லாம் வரவேற்புக்குரிய அம்சங்களாக சொல்லப்பட்டிருக்கிறது. அதுபோல எல்லோரும் எதிர்பார்த்த கல்வி கடன் தள்ளுபடி இல்லை, விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று எதிர்பார்த்தார்கள். நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று எதிர்பார்த்தார்கள்… இப்படிப்பட்ட அறிவிப்புகள் இல்லை.

பெட்ரோல்-டீசல் விலை குறைக்கப்படும் என்று எதிர்பார்த்தார்கள் டீசல் விலை குறைக்கப்படவில்லை. அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்த்தார்கள், அதுவும் வரவில்லை. ஆகவே நல்ல அம்சங்களை உள்ளடக்கிய வரவேற்க கூடிய நிதிநிலை அறிக்கை ஆகவும், எதிர்பார்த்த வகையில் இல்லாத நிதிநிலை அறிக்கை ஆக இருப்பதாகத் தான் பாட்டாளி மக்கள் கட்சி கருதுகிறது என கூறினார்.

Categories

Tech |