Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

சூப்பர் முதல்வர்…! ”சரியான நேரத்தில், சரியான நடவடிக்கை” கலக்கும் எடப்பாடி ..!!

தமிழகத்தில் கொரோனவை கட்டுப்படுத்தும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி எடுத்து வருவது மக்களிடம் பாரட்டை பெற்றுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதும், மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு தடுப்புப் பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது. கொரோனா பரவ தொடங்கியதுமே கொரோனா பரிசோதனை கருவிகள், மருத்துவர்களுக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள், உடைகள் போன்றவற்றை பிற நாடுகளில் ஆர்டர் செய்து நிதி ஒதுக்கீடு செய்தது. மேலும் மத்திய அரசிடம் கூடுதலாக கொரோனா ஆய்வகங்களை அமைக்க அனுமதி பெற்று கொரோனாவுக்கு எதிராக துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது.

Tamil Nadu Journalist Held For Reporting On Doctors Not Getting ...

கொரோனா பாதிப்பு : 

இந்தியாவிலே கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரம் முதலிடம் வகிக்கின்றது. 6ஆவது இடத்தில் உள்ள தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின்  எண்ணிக்கை 1,755ஆக உயர்ந்துள்ள நிலையில் 22 பேர் மரணமடைந்துள்ளனர். இதில் 866 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளதால் இந்தியாவிலே அதிகமானோரை குணப்படுத்திய மாநிலம் என்ற வகையில் இரண்டாம் இடத்தில தமிழகம் நீடிக்கின்றது. இது தமிழக அரசின் ஆக்கபூர்வமான சுகாதார நடவடிக்கையின் பலனாக பார்க்கப்படுகின்றது.

தடுப்பு பணி :

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும் கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்தினார். மருத்துவமனையை ஆய்வு செய்து நடத்தி ஆய்வுக் கூட்டங்களை நடத்தி, அதிகாரிகளுடன் காணொளி காட்சி மூலமாக ஆலோசனை நடத்தி சரியான நேரத்தில் தமிழக அரசு மேற்கொண்ட கொரோனா தடுப்பு நடவடிக்கையே அதிகமானோரை குணப்படுத்தி இந்திய அளவில் முதன்மையான மாநிலமாக தமிழகம் விளங்க வழிவகை செய்தது.

மருத்துவர்கள் நியமனம் :

இந்நிலையில் ஏப்ரல் 30ஆம் தேதியுடன் ஓய்வு பெறும் அரசு மருத்துவர்கள், செவிலியர்களுக்கு மேலும் இரண்டு மாத காலம் பணி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. ஒப்பந்த முறையில் இரண்டு மாத காலத்திற்கு தற்காலிக பணி நியமன ஆணைகள் வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிடுள்ளார். தற்போது 1,323 செவிலியர்கள் மருத்துவப் பணியாளர்கள் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்படும் என்று முதல்வர் தெரிவித்தார்.

சரியான நேரத்தில், சரியான நடவடிக்கை:

கொரோனவை கட்டுப்படுத்த சரியான நேரத்தில் தமிழக முதல்வர் எடுத்துள்ள இந்த நடவடிக்கை கொரோனா பாதித்த அதிகமானோரை குணப்படுத்திய மாநிலம் தமிழகம் என்ற நிலைக்கு உயர்த்தி இந்தியாவிலே தமிழகம் முதலிடம் பிடிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. கொரோனவை கட்டுப்படுத்த சரியான நேரத்தில், சரியான நடவடிக்கை எடுத்த தமிழக முதல்வருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

Categories

Tech |