விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் படத்திற்கு திருநங்கையர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான சூப்பர் டீலக்ஸ் படம் திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இப்பபடத்தில் ஆபாச காட்சிகள் இருந்தாலும் விஜய் சேதுபதி திருநங்கையாக நடித்ததை பலரும் பாராட்டியுள்ளனர். இப்படத்தில் ஒரு காட்சியில் இரண்டு குழந்தைகளை கடத்தி விற்றதாகவும், அந்த குழந்தைகளை வாங்கியவர் கை கால்களை முறித்து பிச்சை எடுக்க பயன்படுத்தியதாகவும், விஜய் சேதுபதி பேசும் வசனம் இடம் பெற்றுள்ளது. இதற்கு ரேவதி, பிரேமா, கல்கி சுப்பிரமணியம் உள்ளிட்டதிருநங்கையர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இது குறித்து திருநங்கைகள் கூறுகையில் , இப்படத்தில் விஜய் சேதுபதி குழந்தைகளை திருநங்கைகள் கடத்துவதாக கூறியுள்ளார். திருநங்கைகள் எப்போது குழந்தைகளை கடத்தினார்கள் என்று சொல்ல முடியுமா? இப்படத்தின் கதையை கேட்டதும் விஜய் சேதுபதி அதில் நடிக்காமல் படத்தை புறக்கணித்து இருக்க வேண்டும். திருநங்கைகளை அவமானப்படுத்துவது போல காட்சியில் நடித்து இருப்பது கண்டிக்கத்தக்கது. இப்படத்தில் இவர் குழந்தை பெற்ற பின் திருநங்கையாக மாறுகிறார், மேலும் மனைவியிடம் புடவை வாங்கி உடுத்தும் காட்சிகள் எந்த அடிப்படையில் படமாக்கப்பட்டது என்று புரியவில்லை. திருநங்கை சமூகத்துக்கு இந்த படம் அநீதி இழைத்துள்ளது என்று கூறியுள்ளனர்.