Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சூப்பர் சுவையில் கத்திரிக்காய் ரோஸ்ட்!!!

கத்திரிக்காய் ரோஸ்ட்

தேவையான  பொருட்கள் :

கத்திரிக்காய் – 4

மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்

மஞ்சள்தூள் – 1/2 டீஸ்பூன்

மல்லித்தூள்  – 1/2  டீஸ்பூன்

சீரகம் – 2 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – தேவையான அளவு

தொடர்புடைய படம்

செய்முறை:

முதலில் கத்திரிக்காயை நறுக்கி சிறிது நேரம் தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு கிண்ணத்தில் மிளகாய்த்தூள்  , மஞ்சள்தூள் , மல்லித்தூள்  , சீரகம் மற்றும் உப்பு சேர்த்துக் கலந்து, அதில் கத்திரிக்காயைப் போட்டுப் புரட்டி எடுக்கவும். பின் தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றி, கத்திரிக்காயை போட்டு வேகவைத்து எடுத்தால் சுவையான கத்திரிக்காய் ரோஸ்ட்  தயார் !!!

Categories

Tech |