Categories
மாநில செய்திகள்

“SUPER FOOD இட்லி” காலை சிற்றுண்டி திட்டத்தில் சேத்துக்கோங்க…. தமிழக அரசுக்கு திடீர் கோரிக்கை….!!!!

இந்தியாவில் சுமார் 700 வருடங்களாக இட்லி உணவு இருக்கிறது. இந்த இட்லியுடன் தான் பெரும்பாலான மக்களின் காலைப்பொழுது விடிகிறது. குறிப்பாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே இட்லியை விரும்பி சாப்பிடுவார்கள். இந்த இட்லியில் விட்டமின் பி, இரும்பு சத்து, நார்ச்சத்து, அமினோ அமிலங்கள், கொழுப்புகள், நொதிகள், புரதங்கள், கார்போ ஹைட்ரேட்டுகள் போன்ற சத்துக்கள் இருக்கிறது. இப்படி ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ள இட்லி  தமிழக அரசின் காலை சிற்றுண்டி திட்டத்தில் எதற்காகஇடம்பெறவில்லை என்ற கேள்விதான் தற்போது பலராலும் முன் வைக்கப்பட்டுள்ளது.

உலக சுகாதார நிறுவனமே ஆரோக்கியமான உணவாக பரிந்துரை செய்த இட்லி தமிழக அரசின் காலை சிற்றுண்டி திட்டத்தில் இடம்பெறாதது பொதுமக்களிடையே சற்று ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக இட்லியை தமிழக அரசின் காலை சிற்றுண்டி திட்டத்தில் சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் காலை சிற்றுண்டி திட்டத்தில் திங்கட்கிழமை உப்புமா மற்றும் காய்கறி சாம்பாரும், செவ்வாய்க்கிழமை சோள காய்கறி கிச்சடி, சேமியா கிச்சடி ரவா கிச்சடி போன்றவற்றில் ஏதாவது ஒன்று, புதன்கிழமை ரவா கிச்சடி அல்லது வெண்பொங்கலுடன் காய்கறி சாம்பார், வியாழக்கிழமை ஏதேனும் ஒரு உப்மாவுடன் காய்கறி சாம்பார், வெள்ளிக்கிழமை ஒரு கிச்சடியுடன் சேமியா அல்லது ரவா கேசரி வழங்கப்படும். மேலும் வாரத்தில் 2 நாட்கள் உள்ளூரில் உற்பத்தியாகும் சிறு தானியங்களால் செய்யப்பட்ட உணவு  இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |