நடிகர் ஆரி நடிப்பில் தயாராகியுள்ள ‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ படத்தின் சூப்பர் ஹீரோ பாடல் ப்ரோமோ வெளியாகியுள்ளது .
தமிழ் திரையுலகில் நடிகர் ஆரி அர்ஜுனன் கடந்த 2010ஆம் ஆண்டு இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் வெளியான ரெட்டைசுழி படத்தின் மூலம் அறிமுகமானார் . இதையடுத்து இவர் நடிப்பில் வெளியான மாலைப் பொழுதின் மயக்கத்திலே படம் சரியான வரவேற்பை பெறவில்லை. இதன் பின்னர் நெடுஞ்சாலை படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் ஆரி. இதைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வந்த ஆரி சமூக அக்கறை கொண்ட விஷயங்களை செய்து தனக்கென தனி ரசிகர்களை உருவாக்கினார் .
தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் கலந்து கொண்டு இன்னும் அதிக அளவு பிரபலமாகியுள்ளார் . இந்த சீசனின் டைட்டில் வின்னர் இவர்தான் என கூறப்படுகிறது . பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன் இவர் அலேகா, பகவான் , எல்லாம் மேல இருக்குறவன் பார்த்துப்பான் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார் . சமீபத்தில் பகவான் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் அலேகா படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது ஆரியின் ‘எல்லாம் மேல இருக்குறவன் பார்த்துப்பான்’ படத்தின் சூப்பர் ஹீரோ பாடல் ப்ரோமோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது .