Categories
சினிமா தமிழ் சினிமா

சூப்பர் ஹிட் சீரியலின் இரண்டாம் பாகம்… நேரடியாக ஓடிடி-யில் ரிலீஸா?…!!!

நந்தினி சீரியலின் இரண்டாம் பாகம் நேரடியாக சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் ரிலீசாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘நந்தினி’ சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது . சுந்தர். சி கதையில், ராஜ்கபூர் இயக்கத்தில், அவ்னி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவான இந்த தொடரில் ராகுல் ரவி ,நித்தியாராம், மாளவிகா வேல்ஸ், விஜயகுமார் ,காயத்ரி, விஜயலட்சுமி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர் . விறுவிறுப்பாக சென்று வந்த நந்தினி சீரியல் சுமார் இரண்டு வருடங்கள் கழித்து தனது ஒளிபரப்பை நிறுத்தியது . இதையடுத்து இந்த சீரியலின் இரண்டாம் பாகத்தை தயார் செய்யுமாறு சுந்தர் சி மற்றும் குஷ்பூ ஆகியோரிடம் ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர் .

நேரடியாக ஓடிடி தளத்தில் ரிலீசாகும் நந்தினி 2 சீரியல்?

இதன் பின் இந்தத் தொடரின் இரண்டாம் பாகத்துக்கான வேலைகள் தொடங்கப்பட்டது . அவ்னி புரொடக்சன் தயாரிப்பில் ராஜ்கபூர் இயக்கத்தில் உருவான இந்த சீரியலுக்கு ‘ஜோதி’  என்ற டைட்டில் வைக்கப்பட்டது. இதில் விஷ்ணு உன்னிகிருஷ்ணன் கதாநாயகனாகவும் ,மேகா ஸ்ரீ மற்றும் சாந்தனா சேகு கதாநாயகிகளாகவும் நடித்துள்ளனர் . ஆனால் இந்த தொடரின் படப்பிடிப்பு சில நாட்களிலேயே எதிர்பாராத காரணங்களால் கைவிடப்பட்டதாக கூறப்பட்டது . இதனிடையே இந்த தொடர் ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருப்பதாக தகவல்கள் கசிந்தது . இந்நிலையில் ‘ஜோதி’ சீரியல் சன் நெக்ஸ்ட் தளத்தில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது .

Categories

Tech |