Categories
இந்திய சினிமா சினிமா

சூப்பர் ஹிட் அடித்த தளபதி விஜய்யின் 2 படங்கள்…. தெலுங்கு வெர்ஷனில் ரீ ரிலீஸ்…. வெளியான தகவல்…..!!!!!

தளபதி விஜய் நடித்த கில்லி அவரது சினிமா வாழ்க்கையில் மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்ததோடு, ரசிகர்களால் இன்று வரை வெகுவாக கொண்டாடப்படும் திரைப்படங்களில் ஒன்றாக அமைந்திருக்கிறது. தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு நடித்த ஒக்கடு படத்தின் ரீமேக்காக தமிழில் கில்லி படம் உருவாக்கப்பட்டது. தெலுங்கு திரையுலகிலும் மிகப் பெரிய வெற்றிப்படமாக அமைந்த ஒக்கடு, தற்போது திரையரங்குகளில் மறு வெளியீடு செய்யப்படவுள்ளது.

அந்த வகையில் வருகிற ஜனவரி 7-ஆம் தேதி “ஒக்கடு” திரைப்படம் திரையரங்குகளில் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதேபோன்று தமிழில் எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் விஜய், ஜோதிகா நடித்த குஷி திரைப்படத்தின் தெலுங்கு வெர்ஷனில் பவன் கல்யாண், பூமிகா ஆகியோர் நடித்து இருந்தனர். தெலுங்கில் மிகப் பெரிய வெற்றியை பெற்ற இப்படமும் வருகிற 31-ஆம் தேதி திரையரங்குகளில் மீண்டும் ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதை முன்னிட்டு இந்த 2 படங்களின் புது டிரைலர்களும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

Categories

Tech |