இயக்குனர் பிஎஸ் மித்ரனுக்கு தயாரிப்பாளர் எஸ் லக்ஷ்மன் குமார் டொயோட்டா கார் ஒன்றை பரிசளித்துள்ளார்.
இயக்குனர் பி எஸ் மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்து வெளியான திரைப்படம் “சர்தார்”. இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரமாக ராஷிகண்ணா, முனிஷ்காந்த், மாஸ்டர் ரித்விக், அவினாஷ், ரஜிஷா விஜயன், யுகி சேது, முரளி சர்மா மற்றும் லைலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படமானது தீபாவளிக்கு முன் அக்டோபர் மாதம் 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் நல்ல வசூலையும் பெற்று வருகின்றது.
பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இதனை தொடர்ந்து வெற்றியை கொண்டாடும் விதமாக இயக்குனர் பி. எஸ். மித்திரனுக்கு அந்நிறுவனத்தின் சார்பாக எஸ். லக்ஷ்மன் குமார் டொயோட்டா கார் ஒன்றை பரிசளித்துள்ளார். மேலும் இந்த டொயோட்டா காரை நடிகர் கார்த்தி இயக்குனருக்கு வழங்கியுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.