ஊரடங்கு கட்டுப்பாடு விதிமுறையை மீறி திறந்து வைக்கப்பட்டிருந்த கடையை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.
கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் பொருட்டு தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால் காலை 10 மணி வரை மட்டுமே காய்கறி மற்றும் மளிகை கடைகள் திறப்பதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கிணத்துக்கடவு பகுதியில் அதிகாரிகள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது அங்கு கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளை மீறி பல்பொருள் அங்காடி திறந்து வைத்திருந்ததை அதிகாரிகள் பார்த்துள்ளனர். இதனையடுத்து அதிகாரிகள் அந்த கடையை பூட்டி சீல் வைத்துள்ளனர். மேலும் அப்பகுதியில் ஊரடங்கின் விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக ஒரே நாளில் 6 ஆயிரத்து 300 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டதாக அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.