Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

சூப்பர் மார்க்கெட்டில் ஏற்பட்ட மின்கசிவு…. கொழுந்துவிட்டு எரிந்த தீ…. திருவாரூரில் பரபரப்பு….!!

மின்கசிவு காரணமாக சூப்பர் மார்க்கெட்டில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டத்திலுள்ள கூத்தாநல்லூர் மருத்துவமனை சாலையில் தனியார் சூப்பர் மார்க்கெட் இருக்கிறது. இங்கு வியாபாரம் முடிந்ததும் அதன் உரிமையாளர் சூப்பர் மார்க்கெட்டை பூட்டிவிட்டு வீட்டிற்குச் சென்றார். இந்நிலையில் அதிகாலை சூப்பர் மார்க்கெட்டில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக சாலையில் கடுமையாக புகைமூட்டம் காணப்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புத்துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 3 மணி நேரத்திற்கு மேல் போராடி சூப்பர் மார்க்கெட்டில் கொழுந்துவிட்டு எரிந்த தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தினால் சூப்பர் மார்க்கெட்டில் இருந்த குளிர்சாதன பெட்டி, கட்டில், மெத்தை, பீரோ மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் அனைத்தும் எரிந்து சேதமடைந்தது. அதன் மதிப்பு சுமார் 12 லட்சம் ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |