“ஜெய் பீம்” திரைப்படத்தின் மூலம் இயக்குநர் ஞானவேல் நடிகர் சூர்யாவுடன் மீண்டும் இணைவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய திரைப்பட இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோரை வைத்து அதிகளவில் திரைப்படங்களைத் தயாரித்து வருகின்றார். இவர் திரைப்படங்களை தயாரித்து மற்றும் விநியோகம் செய்யும் நிறுவனமான ஸ்டுடியோ கிரீன், ஆதனா ஆர்ட்ஸ் மற்றும் புளு கோஸ்ட் பிக்சர்ஸ் ஆகியவற்றின் நிறுவனரும் ஆவார். கடந்த 2021 ஆம் ஆண்டில் வெளியான திரைப்படம் ஜெய் பீம். கொரோனா காரணத்தினால் நேரடியாக OTT தளத்தில் வெளியான இந்த திரைப்படம் தமிழகம் மட்டுமின்றி இந்தியளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய திரைப்படமாக அமைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து இந்தத் திரைப்படம் ரசிகர்கள் இடையே சிறந்த விமர்சனங்களை பெற்றுள்ளது.
மேலும் நடிகர் சூர்யா, மணிகண்டன் மற்றும் லிஜோமோல் ஜோஸ் ஆகியோர் ஜெய் பீம் படத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தின் கூட்டணி மீண்டும் இணை இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து இயக்குனர் ஞானவேல் கூறியதாவது, “மீண்டும் சூர்யா நடிப்பில் இயக்குனர் ஞானவேல் புதிய படம் எடுப்பதாக கூறியுள்ளார் . அந்த படமும் ஜெய் பீம் போலவே சமூகம் சார்ந்த கதையாக இருக்கும். இந்த திரைப்படம் குறித்து ஜெய் பீம் திரைப்படத்திற்கு முன்பே சூர்யாவிடம் கூறியதாகவும் அப்போதே சூர்யா அப்படத்தில் நடிப்பதை உறுதி செய்தாகவும் கூறியுள்ளார். மேலும் அந்த படத்தின் ஷூட்டிங் பணிக்கான வேலைகள் நடந்து வருவதாகவும், வரும் மார்ச் மாதம் முதல் ஷூட்டிங் தொடங்கவுள்ளது” அவர் கூறியுள்ளார்.