Categories
உலக செய்திகள்

சூப்பர்…. மேரிலாந்தில் கால் பதித்த முதல் இந்திய பெண் கவர்னர்….. தேர்தலில் கலக்கிய அருணம் மில்லர்….!!!!

மேரிலாந்தின் முதல் இந்திய வம்சாவளி துணை கவர்னர் என்ற பெருமையை அருணா மில்லர் பெற்றுள்ளார்.

அமெரிக்க நாட்டில் மேரிலாந்து என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாண துணை கவர்னராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அருணா மில்லர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் 6 நவம்பர் 1964 அன்று ஆந்திரப் பிரதேசத்தில் பிறந்தார். அவர் தனது ஏழு வயதில் தனது பெற்றோருடன் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்ததாக கூறப்படுகின்றது. கடந்த 1989 ஆம் ஆண்டு மிசோரி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் சிவில் பொறியியல் பட்டம் பெற்றார்.

இதனை அடுத்து மாண்ட்கோமெரி கவுண்டியிலுள்ள உள்ளூர் போக்குவரத்துத் துறையில் 25 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். இதனைத் தொடர்ந்து 58 வயதான அருணா மில்லர் அதிபர் ஜோ பைடனின் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவராவார். மேரிலாந்தின் லெப்டினன்ட் கவர்னர் தேர்தலில் அருணா வெற்றி பெற்றுள்ளார். கவர்னராக வெஸ் மூர், துணை கவர்னராக இந்திய வம்சாவளியான அருணா மில்லர் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். மேலும் மேரிலாந்தின் முதல் இந்திய வம்சாவளி துணை கவர்னர் என்ற பெருமையை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |