பாசிப்பருப்பு இட்லி
தேவையான பொருட்கள்:
பாசிப்பருப்பு – 2 கப்
பச்சரிசி – 1/2 கப்
சர்க்கரை – 2 கப்
தேங்காய்த் துருவல் – 1 கப்
ஏலப்பொடி – 1 டேபிள் ஸ்பூன்
ஆப்பசோடா – 1 சிட்டிகை
நெய் – 4 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் அரிசி மற்றும் பாசிப்பருப்பு ஆகியவற்றை ஊற வைத்து அரைத்து , அதனுடன் சர்க்கரை, தேங்காய்த் துருவல், ஏலப்பொடி, ஆப்ப சோடா சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.பின்னர் நெய் தடவிய இட்லித்தட்டில் ஊற்றி வேக வைத்து எடுத்தால் சூப்பரான பாசிப்பருப்பு இட்லி தயார் !!!