‘பாக்கியலட்சுமி’ சீரியல் ரசிகர்களுக்கு ஒரு சூப்பரான செய்தி வெளியாகியுள்ளது.
சின்னத்திரையில் நிறைய தொலைக்காட்சிகளில் சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில், விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் முக்கியமான சீரியல்களில் ஒன்று ”பாக்கியலட்சுமி”. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த சீரியல் டி.ஆர்.பியிலும் முன்னிலை வகித்து வருகிறது.
இதனையடுத்து, இந்த சீரியல் ரசிகர்களுக்கு ஒரு சூப்பரான செய்தி வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த சீரியல் வரும் சனிக்கிழமை மாலை 6 மணிக்கு தொடங்கி மூன்று மணி நேரம் தொடர்ந்து ஒளிபரப்பாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த செய்தியை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.