பிரிட்டனில் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை கிட்களை அவர்களது வீட்டுக்கே கொடுத்து அனுப்ப அரசு திட்டமிட்டுள்ளது.
உலகெங்கும் பரவி வரும் கொரானா வைரஸ் பெரும் உயிர் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அனைத்து பள்ளி மற்றும் தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டது. இந்நிலையில் தற்போது தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட வருவதால் தொற்றின் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. ஆகையால் மாணவர்களின் கல்வியை கருத்தில் கொண்டு பிரிட்டனில் வரும் மார்ச் 8ஆம் தேதி முதல் பள்ளியை மீண்டும் திறக்க அரசு முடிவெடுத்துள்ளது.
பள்ளி வரும் மாணவர்களுக்கு தொற்று பரவாமல் இருக்க அரசு ஒரு புதிய திட்டதை கொண்டுவந்துள்ளது. அதன்படி கொரோனா பரிசோதனை செய்யப்படும் கருவிகள் அவர்களது வீட்டிற்கே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கருவி மூலம் பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளுக்கு வீட்டில் இருந்த படியே வாரம் இரண்டு முறை கொரோனா பரிசோதனை செய்ய முடியும்.
இந்த கொரோனா பரிசோதனை கிட்கள் பள்ளியில் பணிபுரியும் டிரைவர்கள், வயது முதிர்ந்தவர்கள் என அனைவருக்கும் கொடுக்கப்படும். அரசின் இந்த புதிய திட்டத்தால் பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை தைரியமாக பள்ளிக்கு அனுப்புவார்கள் என நம்பப்படுகிறது.