Categories
சினிமா தமிழ் சினிமா

சூப்பர்…. “பொன்னியின் செல்வன்” திரைப்படம்…. பிரபல நாட்டில்…. 50 கோடி வசூல்….!!!

அமெரிக்க நாட்டில் “பொன்னியின் செல்வன்” திரைப்படம் 50 கோடி வசூல் செய்துள்ளது. 

தமிழ்த் திரைப்படங்கள் கடந்த பல ஆண்டுகளாகவே உலகளவில் வெளியாகி வருகின்றன. வெளிநாட்டில் படங்களை வெளியிடுவதைப் பற்றி “எப்எம்எஸ்” என்று குறிப்பிட்டு அழைத்து வந்தனர். இந்த “எப்எம்எஸ்” என்பதற்கு “பாரின் மலேசியா சிங்கப்பூர்” என்று அர்த்தம். நடிகர் ரஜினிகாந்த் நடித்த “சிவாஜி” படம் வெளிவருவதற்கு முன்பு வரை மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய இரு நாடுகள் தான் வெளிநாடுகளில் தமிழ்ப் படங்களுக்கான அதிக வசூலைப் பெற்றுத் தரும் நாடுகளாக இருந்தது. அதன் பிறகு இலங்கை மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் இருந்தன. இப்போதும் பேச்சு வழக்கில் சினிமாத் துறையினர் “எப்எம்எஸ்” என்று அழைத்தாலும் அது “ஓவர்சீஸ்” என்று வளர்ந்துவிட்டது.

இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு கம்ப்யூட்டர் துறையில் வேலைக்குச் சென்ற எண்ணற்ற தமிழர்கள், இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்தவர்கள் ஆகியவர்களால் அமெரிக்காவில் தமிழ்த் திரைப்படங்களுக்கு கடந்த 15 வருடங்களாக நல்ல வரவேற்பு இருந்து வருகின்றது. முன்னணி நடிகர்களின் படங்கள் தான் இதுவரையில் அதிக வசூலை அங்கு பெற்றுள்ளன. அந்த விதத்தில் இதுவரையில் அமெரிக்காவில் வெளிவந்த தமிழ்ப் படங்களில் அதிக வசூலைப் பெற்றுள்ள படமாக மணிரத்னத்தின் “பொன்னியின் செல்வன்” திரைப்படம் 50 கோடி வசூலைக் கடந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து 6 மில்லியன் யுஎஸ் டாலர்களை வசூலாகப் பெற்றுள்ளதாக படத்தை அங்கு வெளியிட்டுள்ள நிறுவனம் இரண்டு தினங்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நேற்றைய வசூலுடன் சேர்த்தால் தற்போது 50 கோடி வசூலைக் கடந்துள்ளது. இதற்கு முன்பு நடிகர் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த “2.0” படம் அமெரிக்காவில் 5 மில்லியனுக்கும் சற்று குறைவான தொகையை, அப்போதைய இந்திய ரூபாய் மதிப்பில் 35 கோடி வசூலித்து முதலிடத்திலிருந்தது. இப்போதைய இந்திய ரூபாய் மதிப்பில் கணக்கிட்டால் 40 கோடி. எனவே, 50 கோடியைக் கடக்கவில்லை. முதல் முறையாக ஒரு வெளிநாட்டில் 50 கோடியைக் கடந்துள்ள முதல் படம் என்ற பெருமையை “பொன்னியின் செல்வன்” பெற்றுள்ளது.

Categories

Tech |