மிகவும் சுவையான தக்காளிக்கூட்டு எப்படி செய்வது பார்க்கலாம் வாங்க…
தேவையான பொருட்கள் :
தக்காளி – 1/4 கிலோ
வெங்காயம் -2
உப்பு -தேவையான அளவு
பாசிப் பருப்பு -100 கிராம்
தேங்காய் துருவல் -2 ஸ்பூன்
மஞ்சள் தூள் -1/2 டீஸ்பூன்
கடுகு,உளுந்தம் பருப்பு -1 ஸ்பூன்
வர மிளகாய் -2
கருவேப்பிலை -தேவையான அளவு
எண்ணெய் -தேவையான அளவு
செய்முறை :
வெங்காயம்,தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும் .ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு ,உளுந்தம் பருப்பு,வர மிளகாய்,கருவேப்பிலை சேர்த்து பின்பு அதில் வெங்காயத்தை போட்டு வதக்கிக் கொள்ளவும்.
வெங்காயம் வதக்கிய பின்பு தேவையான அளவு உப்பு ,தண்ணீர் ஊற்றி அதில் பாசிப் பருப்பை போட்டு வேக விட வேண்டும்.பருப்பு வெந்த பின்பு அதில் நறுக்கி வைத்த தக்காளி துண்டுகளை போட்டு வேக விட்டு சுண்டி வரும்போது அதில் தேங்காய் துருவலை போட்டு இறக்கினால் சுவையான தக்காளி கூட்டு தயார் ..!!