விஜய் டிவியில் தற்போது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி 9வது சீசன் நடந்து வருகிறது. இதற்கு முன்னதாக ஒளிபரப்பாகிய சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் வாயிலாக ஓட்டு மொத்த தமிழ்நாட்டு மக்களால் கொண்டாடப்பட்ட பிரபலங்களில் செந்தில்-ராஜலட்சுமி தம்பதியினரும் அடங்குவர். நாட்டுப்புற பாடல்களை பாடி நிகழ்ச்சியில் அசத்திய இவர்கள் தற்போது பல மேடைகளில் பாடல்கள் பாடி வருகின்றனர். மேலும் நடிப்பதிலும் இருவரும் ஆர்வம்காட்டி வருகின்றனர்.
செந்தில் ஏற்கெனவே தொடர்ந்து சின்ன சின்ன திரைப்படங்கள் நடித்துள்ளார். எனினும் பெரியளவில் வரவேற்பு பெறவில்லை. இப்போது ராஜலட்சுமி புது படம் ஒன்றில் நடித்துள்ளார். அந்த படத்துக்கான ஃபஸ்ட் லுக் வெளியாகிய நிலையில், அதைப் பார்த்த ரசிகர்கள் அட இதுவா ராஜலட்சுமி என ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர். அதாவது வேறொரு லுக்கில் ராஜலட்சுமி நடித்திருக்கும் லைசென்ஸ் திரைப்பட லுக் அமைந்துள்ளது.
https://twitter.com/Drunks_monkey/status/1602200683049996289?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1602200683049996289%7Ctwgr%5E13b00e5ac0bea8043694c13b93d6c1d8f83fc6f2%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fcineulagam.com%2Farticle%2Fsuper-singer-fame-rajalakshmi-new-film-look-1670830894