சூப்பர் சிங்கர் பிரபலம் வெளியிட்டுள்ள புகைப்படத்திற்கு ரசிகர்கள் தங்கள் லைக்குகளைக் அள்ளி குவித்து வருகின்றனர்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அந்தவகையில் பல வருடங்களாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்கேற்கும் பலரும் தற்போது பிரபலமாக வளர்ந்து வருகின்றனர்.
அந்த வகையில் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரகதி தற்போது படிப்படியாக உயர்ந்து தமிழ் திரையுலகில் பின்னணி பாடகியாக இருக்கிறார். இவர் பரதேசி, காதலும் கடந்துபோகும், ராட்சசன் உள்ளிட்ட படங்களுக்கு பின்னணி பாடல் பாடியுள்ளார்.
இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் பிரகதி ரசிகர்களை கவரும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அவரின் இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் பலரும் தங்களது லைக்குகளை அள்ளிக் குவித்து வருகின்றனர்.
https://www.instagram.com/p/CUg07cOrCkj/?utm_source=ig_embed&ig_rid=2ed3ada4-a072-44c1-b319-d659d5e9b231