சூப்பர் சிங்கர் மாளவிகாவின் திருமண புகைப்படம் வெளியாகியுள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல நிகழ்ச்சிகளில் ஒன்று ”சூப்பர் சிங்கர்”. இதில் சீசன் ஒன்றில் கலந்துகொண்டு ரசிகர்களிடையே பிரபலமானவர் மாளவிகா. இவர் சமீபத்தில், தனக்கு நிச்சயதார்த்தம் முடிந்து இருப்பதாக அறிவித்திருந்தார். அதனால் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்தது.
குறிப்பாக, தன்னை விட வயது குறைந்தவரை திருமணம் செய்ய இருப்பதாகவும் கூறியிருந்தார். இந்நிலையில், இவருக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது. இவரின் திருமண புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.