சூப்பர் சிங்கர் மானசி கலக்கலான போட்டோ ஷூட் நடத்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
விஜய் டிவியில் பல வருடங்களாக ஹிட் நிகழ்ச்சியாக ஓடிக்கொண்டிருப்பது சூப்பர் சிங்கர். இந்நிகழ்ச்சியில் தற்போது பெரியவர்களுக்கான 8வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இறுதி கட்டத்தை நோக்கி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் இந்நிகழ்ச்சியில் அபிலாஷ், பரத், முத்து சிற்ப்பி, ஸ்ரீதர் சேனா, அணு மற்றும் மானசி ஆகிய 6 பேரும் இறுதிச்சுற்றுக்கு தேர்வாகியுள்ளனர்.
இந்நிலையில் wild card மூலம் இறுதி சுற்றிற்கு தேர்வான மானசி கலக்கலான போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.