சூப்பர் சிங்கர் பிரபலம் ஆதித்யா கிருஷ்ணன் பிரபல நடிகை மீரா கிருஷ்ணனின் மகன் என்ற தகவல் வெளியாகியுள்ளது .
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர் . குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர் என இருவருக்கும் தனித்தனியே நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது . கடந்த 2006 இல் தொடங்கப்பட்ட சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தற்போது 8வது சீசனை எட்டியுள்ளது . இந்த சீசனின் முதல் எபிசோடிலேயே அசத்தலாக பாடி அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் ஆதித்யா கிருஷ்ணன் . இவர் பாடல்கள் பாடுவது மட்டுமல்லாது கிட்டார் வாசிக்கும் திறமையும் கொண்டவர் .
இவர் நடிகர் கமலின் சூப்பர் ஹிட் பாடலான ‘உனக்கென்ன மேலே நின்றாய்’ பாடலை பாடி வெளியிட்ட ஆல்பம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது . இந்நிலையில் ஆதித்யா பிரபல நடிகை மீரா கிருஷ்ணனின் மகன் என்ற தகவல் வெளியாகியுள்ளது . மேலும் ஆதித்யாஅவரது தாய் மீரா கிருஷ்ணனுடன் இருக்கும் புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது .