சாதம், சப்பாத்தி, இட்லி ,தோசைக்கு ஏற்ற ஒரு சூப்பரான சைடிஷ் மொச்சை மசாலா செய்யலாம் வாங்க .
தேவையான பொருட்கள்:
மொச்சை – 1 கப்
வெங்காயம் – 1
தக்காளி – 1
துருவிய தேங்காய் – 1/4 கப்
மிளகாய்தூள் – 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்
சீரகம் – 1/4 டீஸ்பூன்
கொத்தமல்லி – சிறிதளவு
எண்ணெய் – தேவைக்கு ஏற்ப
உப்பு – தேவைக்கு ஏற்ப
செய்முறை:
முதலில் மொச்சையை முதல் நாள் இரவே ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதனை குக்கரில் 3 விசில் வரும் வரை வேக வைக்க வேண்டும் . மிக்ஸியில் தேங்காய்த்துருவல், மிளகாய்தூள், மஞ்சள் தூள், கரம்மசாலா, சீரகம், வெங்காயம், தக்காளி சேர்த்து அரைத்துக்கொள்ள வேண்டும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு , அரைத்த விழுது மற்றும் வேக வைத்த மொச்சை சேர்த்து ,சிறிது தண்ணீர் விட்டு கொதிக்க விட வேண்டும். பின்னர் கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவையான மொச்சை மசாலா தயார் !!!