தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான அண்ணாத்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக சாதனை படைத்தது. இந்த படத்திற்குப் பிறகு ரஜினி நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன் மற்றும் யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ரஜினியின் 170-வது திரைப்படத்தை டான் படத்தை இயக்கிய சிபிச் சக்கரவர்த்தி இயக்குவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
இந்நிலையில் ரஜினி 170-வது திரைப்படத்துடன் நடிப்புக்கு முழுக்கு போடுவதாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது அடுத்தடுத்த 2 படங்களில் கமிட்டாகியுள்ளார். அதன்படி ரஜினி 170 மற்றும் 171 ஆகிய படங்களை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. அதன்பிறகு ரஜினியின் 171-வது திரைப்படத்தை அவருடைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்குகிறார். இந்த தகவலை லைகா நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் லைகா நிறுவனமானது தற்போது இந்தியன் 2, பொன்னியின் செல்வன் 2, சந்திரமுகி 2 மற்றும் நாய் சேகர் ரிட்டன்ஸ் போன்ற படங்களை தற்போது தயாரித்து வருகிறது.
Official: @LycaProductions has signed a two movie deal with #Superstars @rajinikanth
The first movie 's pooja will happen in a Grand manner on November 5th.. pic.twitter.com/OtpyUTxpU4
— Ramesh Bala (@rameshlaus) October 28, 2022