தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகை நிதி அகர்வால் எனக்கு சூப்பர் ஸ்டார் என்றால் அது விஜய் தான் என கூறியுள்ளார்
தமிழ் திரையுலகில் தளபதி என அழைக்கப்படும் விஜயின் திரைப்படங்கள் தென்னிந்தியா முழுவதும் மிக பிரம்மாண்டமாக வெளியாகும். சென்ற வருடம் வெளியான பிகில் திரைப்படம் 300 கோடி வசூல் செய்தது. அதனைத்தொடர்ந்து விஜய் நடித்து முடித்த மாஸ்டர் படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.
இந்நிலையில் பிரபல தெலுங்கு நடிகையான நிதி அகர்வால் ரசிகர்களுடன் டுவிட்டரில் உரையாடல் நடத்தியுள்ளார். அதில் ரசிகர் ஒருவர் நடிகர் விஜய் பற்றி ஒரு வார்த்தையில் கூறுங்கள் எனக் கேட்டதற்கு பதிலளித்த நிதி அகர்வால், “விஜய் என்னை வியக்க வைக்கும் நட்சத்திரம், அவர் ஒரு சூப்பர் ஸ்டார்” என பதிலளித்துள்ளார் நிதி அகர்வால் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள பூமி திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாக உள்ளார்.