Categories
சினிமா தமிழ் சினிமா

சூப்பர் ஸ்டாருடன் நதியா… 32 வருடத்திற்கு முன் ‘ராஜாதி ராஜா’… வைரல் புகைப்படம்…!!!

நடிகை நதியா நடிகர் ரஜினிகாந்துடன் ‘ராஜாதி ராஜா’ படப்பிடிப்பின் போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் .

தமிழ் திரையுலகில் 80-களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த நடிகைகளில் ஒருவர் நதியா . இவர் தனது நடிப்பால் ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் . இவர் தமிழில் மட்டுமல்லாது மலையாளத்திலும் முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்து அசத்தியுள்ளார். இவர் நடிப்பில் வெளியான பெரும்பாலான படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்தது . இதன்பின் நதியா திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டில் ஆனார். நீண்ட இடைவெளிக்குப் பின்னர் ஜெயம் ரவியின் எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தின் மூலம் சினிமாவில் ரீ-என்ட்ரி ஆனார். தற்போது வரை சில திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

https://twitter.com/ActressNadiya/status/1367370702060359683

இந்நிலையில் நதியா தனது டுவிட்டர் பக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் . இந்த புகைப்படம்  ராஜாதிராஜா படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்டது . மேலும் அதில் ‘இந்த படம் எடுக்கப்பட்டு 32 வருடங்கள் ஆனதை நம்ப முடியவில்லை. நேரம் பறக்கிறது. நினைவுகள் என்றென்றும் இருக்கும்’  என்று பதிவிட்டுள்ளார் . தற்போது நதியாவின் இந்த ட்வீட் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |