Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மறுசுழற்சி செய்யும் அமைப்பு…. அதிநவீன சூப்பர் சக்கர் வாகனம்…. மாநகராட்சி கமிஷனரின் ஆய்வு…!!

கழிவுநீரை அகற்றும் பணியில் அதிக திறன் கொண்ட சூப்பர் சக்கர் வாகனம் ஈடுபட்டுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள புலியகுளம் விநாயகர் கோவில் பின்புறம் இருக்கும் இடங்களில் சாக்கடை கால்வாய் மற்றும் கழிவுநீர் ஓடைகளில் தண்ணீரை உறிஞ்சி அடைப்புகளை சரி செய்யும் பணி தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த பணியில் சூப்பர் சக்கர் என்ற வாகனம் ஈடுபட்டுள்ளது. இதனை மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சுன்கரா நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது மழைநீர் வடிகால்களில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை சரி செய்து கழிவு நீரை உறிஞ்சிவதற்காக அதிக திறன் கொண்ட சூப்பர் சக்கர் வாகனம் கோவைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த வாகனம் மணிக்கு 85 ஆயிரம் லிட்டர் நீரை உறிஞ்சி அதனை மறுசுழற்சி செய்து உபயோகிக்கும் அமைப்பினை கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |