Categories
சினிமா தமிழ் சினிமா

சூப்பரோ சூப்பர்…. வித்தியாசமான மாஸ்க்கில் ஸ்ருதிஹாசன்…. குவியும் பாராட்டுக்கள்…!!!

வித்தியாசமான மாஸ்க் அணிந்துள்ள ஸ்ருதிஹாசனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை ஸ்ருதிஹாசன். இவர் நடிப்பில் மட்டுமின்றி பாடல் பாடுவதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். முன்னணி நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக இவர் நடித்துள்ள ‘லாபம்’ திரைப்படம் கூடிய விரைவில் ரிலீசாக உள்ளது. இந்நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ருதிஹாசன் அவ்வப்போது தனது புகைப்படங்களை அதில் பகிர்ந்து வருகிறார்.

அந்த வகையில் அவர் தற்போது வித்தியாசமான மாஸ்க் ஒன்றை அணிந்து புகைப்படம் எடுத்து அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அந்த மாஸ்க்கில் ‘தமிழ் பொண்ணு’ என்ற வார்த்தை பொறிக்கப்பட்டுள்ளது. இந்தப் புகைப்படத்திற்கு ஏராளமான லைக்குகள் குவிவதோடு ஸ்ருதிஹாசனுக்கு பாராட்டுகளும் குவிந்து வருகிறது.

https://www.instagram.com/p/COP5tjqhtKL/?igshid=1izf92k7fzfst

Categories

Tech |