தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் அரையாண்டு தேர்வு முடிவடைந்த நிலையில் டிசம்பர் 24-ம் தேதி முதல் அரையாண்டு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை முடிவடைந்த பிறகு 1 முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜனவரி 5-ஆம் தேதியும், 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும். இந்நிலையில் ஜனவரி மாதத்தில் பண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறைகள் என மாணவர்களுக்கு அதிக விடுமுறைகள் வர இருக்கிறது.
அதன்படி ஜனவரி மாதத்தில் 5 ஞாயிற்றுக்கிழமைகள், 4 சனிக்கிழமைகள், பொங்கல், திருவள்ளுவர் தினம், உழவர் திருநாள் என 3 நாட்களும், ஜனவரி 26 குடியரசு தினத்தன்று 1 நாள் விடுமுறை 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 13 நாட்கள் விடுமுறை வரும். மேலும் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜனவரி 5-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதால் கூடுதல் விடுமுறையாக 16 நாட்கள் விடுமுறை வரும்.