மத்திய பிரதேச மாநிலத்தின் முதல்வர் சிவராஜ் ஷௌக்கான் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி 12-ம் வகுப்பில் 75 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்கு உயர் கல்வி இலவசம் என்று அறிவித்துள்ளார். அதன் பிறகு அதிகபட்சமாக 75 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் எடுக்கும் மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவ படிப்பில் சேர்ந்தால் அதற்குரிய கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும்.
இதேபோன்று ஜேஇஇ நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்று ஐஐடி படிக்கும் மாணவர்கள், பொறியியல் படிக்கும் மாணவர்கள் மற்றும் சட்டக் கல்லூரியில் படிக்கும் மாணவர்களும் 75 சதவீதத்திற்கும் மேல் மதிப்பெண் எடுத்தால் அவர்களுக்கான கல்வி கட்டணத்தையும் அரசு ஏற்கும் என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஏற்கனவே 12-ம் வகுப்பில் 75 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்பட்டு வருகிறது. இது தவிர 110 கிராமங்களில் விளையாட்டு மைதானங்களை மேம்படுத்தவும் அரசு முடிவு செய்துள்ளது. மேலும் மாநில அரசின் சார்பில் 10 லட்சம் புதிய அரசு பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளதோடு, அதற்குரிய பணியிடங்களும் நிரப்பப்பட்டு வருகிறது.