Categories
அரசியல் மாநில செய்திகள்

செம சூப்பர்…! ரூ.100 குறைத்த தமிழக அரசு… கலக்கலான அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி…!!

செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, மாண்புமிகு தமிழக முதல்வருடைய அறிவுரை என்னவென்றால்,  சிறப்பு தரிசனம் – சிறப்பு கட்டண தரிசனத்தை முழுமையாக இல்லாமல் செய்ய வேண்டும் என்பது அவருடைய நோக்கம். இருந்தாலும் திருக்கோவிலின் உடைய பொருளாதார நிலை,  சூழ்நிலையை கருதி,  சிறப்பு கட்டணங்களை படிப்படியாக குறைத்து வருகிறோம்.

ஒரு சில திருக்கோவில்களில் நல்ல நிலையில் அந்த திருக்கோவிலின் பொருளாதாரம் இருக்கின்ற நிலையில் முழுமையாக அந்த கட்டணத்தை ரத்து செய்கின்றோம். அருள்மிகு ஸ்ரீ பார்த்தசாரதி திருக்கோவிலில் 200 ரூபாய் என்று இருந்த கட்டணத்தை 100 ரூபாயாக குறைக்க சொல்லி ஆணையாளர்கள் அவரும், நானும்,  துணை ஆணையாளர் அவர்களுக்கு உத்தரவிட்டிருக்கின்றோம்.

அந்த வகையில் 200 ரூபாய் ஆக  இருந்த கட்டணம்,  குறைக்கப்படுகிறது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம். தொடர்ந்து தமிழ்நாட்டிலே ஏகாதசியை முன்னிட்டு அதிகமான அளவிற்கு பக்தர்கள் வருகின்ற அனைத்து திருக்கோவில்களிலும் இதுபோன்ற ஒருங்கிணைந்த கூட்டங்களை நடத்த சொல்லி அந்த துறையின் உடைய அனைத்து இணை ஆணையர்களுக்கும்,  மண்டல இணை ஆணையர்களுக்கும் அந்தந்த திருக்கோவிலின் உடைய பொறுப்பிலே இருக்கின்ற அதிகாரிகளுக்கும்,  நம்முடைய துறையினுடைய ஆணையாளர் அவர்கள் சுற்றரிக்கை அனுப்ப உள்ளார்கள் என தெரிவித்தார்.

Categories

Tech |