முகம் பொலிவு பெறுவதற்கு வேம்பு எப்படி பயன்படுகின்றது என்பதை இப்போது பார்க்கலாம்.
எல்லோரும் பெரும்பாலும் முகத்தை அழகாக வைக்க நினைப்பது உண்டு. அதற்காக பல கிரீம்களையும், இயற்கை பொருட்களையும் முகத்திற்கு எடுத்துக் கொள்வதுண்டு. சிலர் இதற்கு மெனக்கெடாக பல செலவுகள் செய்து வருகின்றனர். முகம் பொலிவு பெற நம் பக்கத்தில் இருக்கும் வேப்ப மரமே சிறந்த ஒரு நிவாரணியாக இருக்கும்.
பலன்கள்:
தோலில் எண்ணெய், இறந்த செல்கள், பாக்டீரியாக்கள், முகப் பருக்கள் ஆகியவற்றை நீக்க வேம்பை பயன்படுத்துவது நல்லது.
வேம்பின் இலையை அரைத்து சோப்பு போன்று பயன்படுத்தலாம்.
வேம்பில் உள்ள நுண்ணுயிர் எதிர்ப்பிகள், தோலின் நுண்ணுயிரிகளை அழித்து முகம் பொலிவாக இருக்கும்.
முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்க உதவும்.
சுருக்கங்களை நீக்கும் வேம்பில் சக்தி உள்ளது.