தேவையான பொருட்கள் :
தோசை மாவு – 2 கப்
தக்காளிப்பழம் – 4
மிளகு தூள் – 2 டீஸ்பூன்
சீரகத்தூள் – 2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை :
முதலில் தக்காளிப்பழத்தை வட்டமாக நறுக்கி கொள்ள வேண்டும். தோசைக் கல்லை அடுப்பில் வைத்து , ஒரு கரண்டி மாவை ஊற்றி தக்காளிப் பழத் துண்டுகளை அதன் மேல் பரப்பி உப்பு , மிளகு , சீரகத்தூள் தூவி எண்ணெய் விட்டு வெந்ததும் எடுத்தால் சூப்பரான தக்காளிப்பழ ஊத்தப்பம் ரெடி!!!