நாய் சேகர் படத்தில் இடம் பெற்றுள்ள நாய்க்கு பிரபல நடிகரின் குரல் பேசப்பட்டுள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.
காமெடி நடிகர் சதீஷ் மற்றும் குக் வித் கோமாளி பிரபலம் பவித்ர லட்சுமி ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் நாய் சேகர். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படம் பிரவீன் ஒளிப்பதிவிலும் அஜீஷ் அசோக் இசையமைப்பிலும் உருவாகி வருகிறது. இறுதிக்கட்ட படப்பிடிப்பை எட்டியுள்ள இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.
இந்த படத்தில் கதாநாயகனுக்கு நாயின் குணாதிசயங்களும், நாய்க்கு மனிதனின் குணாதிசயங்களும் வருவது போல உருவாக்கப்பட்டுள்ளது. ஆகையால் இப்படத்தினை காண ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள அந்த நாய்க்கு பிரபல நடிகர் சிவாவின் குரல் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை நாய் சேகர் படக்குழுவினர் உறுதி செய்துள்ளனர்.
Thank you @actorshiva for being the voice behind the pet in #NaaiSekar 😍🤗
▶️ https://t.co/GirZkCUyZh#NaaiSekarTeaser @Ags_production @agscinemas @archanakalpathi @aishkalpathi @itspavitralaksh @KishoreRajkumar @anirudhofficial @venkat_manickam @iamSandy_Off @SonyMusicSouth pic.twitter.com/XySQ9adC3Y
— Sathish (@actorsathish) January 2, 2022