‘நானே வருவேன்’ படத்தின் சூட்டிங் குறித்த அப்டேட் ஒன்றை இயக்குனர் வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவின் பிரபல முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம்” மாறன்”. இதனைத் தொடர்ந்து இவர் தற்போது கைவசம் நிறைய படங்கள் வைத்துள்ளார். இதனையடுத்து இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் தற்போது இவர் ”நானே வருவேன்” படத்தில் நடித்து வருகிறார். கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கும் இந்த படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
மேலும், இந்த படத்தில் யோகி பாபு, இந்துஜா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில், இந்த படத்தின் சூட்டிங் குறித்த அப்டேட் ஒன்றை இயக்குனர் வெளியிட்டுள்ளார். அதன்படி, இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக செல்வராகவன் தெரிவித்திருக்கிறார்.
இறுதி கட்ட படப்பிடிப்பில் ! #naanevaruven
@theVcreations
@dhanushkraja
@thisisysr
@omdop pic.twitter.com/OFgedM9qFK— selvaraghavan (@selvaraghavan) March 25, 2022