‘தளபதி 65’ படத்தில் நடிக்கவுள்ள காமெடி நடிகர்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது .
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் வெளியான ‘மாஸ்டர்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது . இதையடுத்து நடிகர் விஜய் நடிக்க உள்ள தளபதி 65 படத்தை இயக்குனர் நெல்சன் திலிப்குமர் இயக்க உள்ளார் . சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் . மேலும் இந்தப் படத்தில் கதாநாயகியாக பிரபல தெலுங்கு நடிகை பூஜா ஹெக்டே நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது .
இந்நிலையில் ‘தளபதி 65’ படத்தில் முண்ணனி காமெடி நடிகர்கள் கணேஷ் ஜனார்தனன் மற்றும் யோகி பாபு ஆகியோர் இணைந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே கோலமாவு கோகிலா படத்தின் காமெடி காட்சிகள் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நெல்சன் தற்போது இந்த இரண்டு காமெடி நட்சத்திரங்களை ‘தளபதி 65’ படத்தில் நடிக்க வைக்க ஒப்பந்தம் செய்திருப்பது கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது .