Categories
மாநில செய்திகள்

சூப்பரோ சூப்பர்!….. தமிழகத்தில் 2023-ல் ஜல்லிக்கட்டு போட்டிகள்…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் வருகிற 2023-ம் ஆண்டு திட்டமிட்டபடி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் என்று அரசு அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன் பிறகு ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில், தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் என்று உறுதி கொடுத்துள்ளது. இந்நிலையில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதனையடுத்து ஜனவரி 14-ஆம் தேதி அவனியாபுரம், ஜனவரி 15-ம் தேதி பாலமேடு, ஜனவரி 16-ஆம் தேதி அலங்காநல்லூர் ஆகிய பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் என்று அரசு உறுதி கொடுத்துள்ளது. மேலும் தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுமா என்ற சந்தேகம் பலருக்கும் இருந்த நிலையில் தற்போது தமிழக அரசு அனைவரையும் மகிழ்ச்சி படுத்தும் விதமான ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Categories

Tech |