Categories
மாநில செய்திகள்

சூப்பரோ சூப்பர்!… பொங்கல் பரிசாக ரேசன் கார்டுதாரர்களுக்கு ரூ. 2000…..? விரைவில் குட் நியூஸ் வருமா….??

தமிழகத்தில் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கார்டு தாரர்களுக்கு தமிழக அரசு பொங்கல் பரிசு பணம் ரூபாய் 1000 வழங்குவதற்கு முடிவு செய்துள்ளதாக சமீப  காலமாகவே தகவல்கள் வெளி கண்டு கொண்டிருக்கிறது. அதன்படி ரேஷன் கார்டு தாரர்களுக்கு வங்கி கணக்கில் ரூபாய் 1000 ரொக்க பணம் செலுத்தப்பட இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த வருடம் பொங்கல் பரிசு பணம் கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மளிகை பொருட்கள் மட்டுமே கொடுக்கப்பட்டது.

கடந்த அதிமுக ஆட்சியில் 2500 ரூபாய் பொங்கல் பரிசு பணமாக கொடுக்கப்பட்ட நிலையில், தற்போது திமுக அரசு குறைந்தது 2000 ரூபாயாவது கொடுக்க வேண்டும் என ரேஷன் கார்டு தாரர்கள் எதிர்பார்க்கிறார்கள். இது தொடர்பாக தமிழக அரசு தான் முடிவு செய்ய வேண்டும். மேலும் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வமும் பொங்கல் பரிசு பணமாக ரூபாய் 3000 கொடுக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |