இந்தியாவில் மத்திய அரசானது சமீபத்தில் அகவிலைப்படி உயர்வு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டது. அதன் பிறகு மாநில அரசுகளும் அகவிலைப்படி உயர்வு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மான் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதன்படி பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழக ஊழியர்கள் மற்றும் கல்லூரி ஊழியர்களுக்கு சம்பளம் உயர்த்தப்படும். இதேப்போன்று ஆசிரியர்கள், பகுதி நேர ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் என அனைவருக்கும் 7-வது ஊதிய குழுவின் பரிந்துரையின் படி சம்பளம் உயர்த்தப்படும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார். மேலும் இந்த அறிவிப்பால் அரசுக்கு கூடுதலாக 280 கோடி ரூபாய் வரை நிதி சுமை ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.