சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய தந்தை, மகன் இருவரும் போலீஸ் சித்ரவதையால் மரணமடைந்த சம்பவம் இந்திய அளவில் பேசுபொருள் ஆகியது. இதற்கு கிரிக்கெட் பிரபலங்கள், திரைப்பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள், தேசிய அரசியல் கட்சி தலைவர்கள் என பலரும் கண்டனங்களை தெரிவித்து வந்தன. இந்த வழக்கில் நியாயமான விசாரணை நடக்க வேண்டும். குற்றவாளிகள் தப்பிவிடக் கூடாது என்றெல்லாம் பல்வேறு தரப்பில் இருந்து இந்த பிரச்சனைக்கு குரல் ஓங்கி ஒலித்தது.
இதனையடுத்து தற்போது இந்த வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் திரைப்பிரபலமான நடிகர் நடிகர் சூர்யா கூட இரண்டு பக்க கண்டன அறிக்கையை தெரிவித்திருந்தும், முக்கிய நட்சத்திரங்களாக விளங்கும் விஜய், ரஜினி, அஜித் போன்றவர்கள் இதுவரை இந்த பிரச்சினை குறித்து வாய் திறக்காமல் இருந்தார்கள் என்றெல்லாம் பேசப்பட்டது.
இரண்டு தினங்களுக்கு முன்பு கூட நடிகர் ரஜினிகாந்த் ஜெயராஜ் குடும்பத்தினரை தொடர்புகொண்டு தன்னுடைய இரங்கலை தெரிவித்து இருந்தார். ஆனால் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்காமல் இருந்தது பெரும் பேசுபொருளாக இருந்தது. இந்த நிலையில் தற்போது நடிகர் ரஜினிகாந்த் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
ட்விட்டரில், தந்தையையும், மகனையும் சித்ரவதை செய்து மிருகத்தனமான கொன்றதை மனித இனமே எதிர்த்து கண்டித்த பிறகும், காவல் நிலையத்தில் மாஜிஸ்ட்ரேட் எதிரிலேயே சில காவலர்கள் நடந்து கொண்ட முறையும், பேசிய பேச்சும் அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தகுந்த தண்டனை கண்டிப்பாக கிடைத்தாக வேண்டும் . விடக்கூடாது சத்தியமாக விடக்கூடாது என்று ரஜினி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
#சத்தியமா_விடவே_கூடாது pic.twitter.com/MLwTKg1x4a
— Rajinikanth (@rajinikanth) July 1, 2020