அதிமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, எப்போதுமே திமுககாரர்கள் விஞ்சான மூளை படைத்தவர்கள். ஆகவே தன்னுடைய பையனை ஸ்டாலின் அவர்கள்… திரைப்படத்தில் நடித்து, அதன் மூலமாக திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் கொள்ளை அடிக்கின்ற பணத்தை… கருப்பு பணத்தை…. வெள்ளையாக்குவது திரைப்படத்தில் தோன்றி நடித்து கொண்டு இருக்கின்றார்.
அவர் ஒரு கம்பெனி வைத்திருக்கின்றார். ரெட் ஜெயின்ட் மூவீஸ் என்று ஒரு கம்பெனி வைத்திருக்கிறார். அந்த கம்பனியில் தான் யார் படத்தை தயார் செய்தாலும் விற்க முடியும். அந்த படத்தை அவரிடம் விற்றால் தான்…. திரையரங்கம் கிடைக்கும். தமிழ்நாட்டில் இருக்கின்ற எல்லா தியேட்டர்களிலும் இந்த படத்தை வெளியிட வேண்டும் என்றால்….
ஸ்டாலின் அவர்களின் மகன் உதயநிதி அவர்களுடைய கம்பெனி ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்திற்கு விற்பனை செஞ்சா தான், அந்த படத்தை வெளியிட முடியும். அதிலும் விற்பனை கூட கிடையாது 20% கமிஷன் தான். எல்லாத்திலும் கமிஷன் உள்ளது. எல்லாதுறையிலும் கமிசன் இருக்கின்றது. இந்த திரைத்துறையிலும் கமிசன் வாங்குகின்ற ஒரே கட்சி திமுக கட்சி. அதையும் விட்டு வைக்கவில்லை.
எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் சரி…. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படமானாலும் சரி…. முன்னணி திரைப்பட நடிகர்கள் நடித்த திரைப்படம் வெளிவருவதா ? இருந்தாலும் இந்த ரெட் ஜெயிண்ட் மூவிஸ்க்கு தான் விற்பனை செய்ய வேண்டும் அல்லது கமிஷனுக்கு கொடுக்க வேண்டும். அப்போது 20% கமிஷன் வாங்கி தான் உதயநிதி இன்றைக்கு திரைப்படத்தை வெளியிட்டு கொண்டு இருக்கின்றார்.
150 படம்… சிறு சிறு முதலீட்டில் படங்கள் எடுக்கப்பட்டு, பெட்டியில் தூங்கிக் கொண்டு இருக்கின்றது. தியேட்டரில் வெளியிட முடியல. அவர்களுக்கு தியேட்டர் கிடைக்கவில்லை. இதே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் குறைந்த பட்ஜெட்டில் படம் எடுத்தாலும், அவர்களுக்கு தியேட்டர் கிடைச்சது. நிறைய படங்கள் வெளியே வந்தது. மக்கள் கண்டு களித்தார்கள்.
ஆனால் இன்றைய தினம் திரு. ஸ்டாலின் குடும்பம், அரசியலில் மட்டுமில்லை… திரையுலகிலும் அவர்கள் யாரையும் விட்டுவைக்கவில்லை. ஆக இன்றைய தினம் திரையுலகம் நசுங்கிக் கொண்டு இருக்கிறது. இதை எதற்காக சொல்கிறேன் என்று சொன்னால் ? கட்சியிலும் சரி, ஆட்சியிலும் சரி கொள்ளையடிப்பதற்காக கட்சி நடத்துகின்ற ஒரே தலைவர் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் தான் என தெரிவித்தார்.