Categories
சினிமா தமிழ் சினிமா

செம…. விக்ரம் பிரபுவை பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்….. நீங்களே பாருங்க….!!!

ரஜினிகாந்த் விக்ரம் பிரபுவை போனில் அழைத்து பாராட்டியுள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் விக்ரம்பிரபு. இவர் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், பாயும் ஒளி நீ படத்திலும் நடித்திருக்கிறார். விரைவில் இந்த திரைப்படங்கள் ரிலீசாக உள்ளன. இதனையடுத்து, இயக்குனர் தமிழ் இயக்கத்தில் இவர் நடித்துள்ள திரைப்படம் ”டாணாக்காரன். இந்த படத்தில் கதாநாயகியாக அஞ்சலி நாயர் நடித்துள்ளார்.

Rajinikanth appreciates vikram prabhu after watching taanakkaran

மேலும் இந்த படத்தில் லால்,எம்.எஸ். பாஸ்கர் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கடந்த ஏப்ரல் 8ஆம் தேதி நேரடியாக OTT யில் ரிலீசான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. மேலும், விமர்சன ரீதியாகவும் பலரது பாராட்டுக்களையும் இத்திரைப்படம் பெற்று வருகிறது. அந்த வகையில், இந்த படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினி பார்த்த பிறகு விக்ரம் பிரபுவை போனில் அழைத்து பாராட்டியுள்ளார். இதனை நடிகர் விக்ரம் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |