அதிமுக_வின் முன்னாள் அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன் அதிமுக_வில் இருந்து விலகி திமுக_விற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஏப்ரல் 18-ஆம் தேதி சட்டமன்ற இடைத்தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகின்றது . அதிமுக கூட்டணியில் பாஜக , தேமுதிக , பாமக , புதிய நீதி கட்சி , புதிய தமிழகம் கட்சி மற்றும் தமாகா இடைப்பெற்றுள்ளது. அதே போல திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் , இடதுசாரிகள் , மதிமுக , விசிக , கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி , இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மற்றும் இந்திய ஜனநாயக கட்சி இடம்பெற்றுள்ளது.
ஏறக்குறைய அதிமுக மற்றும் திமுக கூட்டணி கட்சிகள் தங்களின் வேட்பாளரை அறிவித்தனர். நேற்று திமுக மற்றும் அதிமுக தங்கள் கட்சி சார்பில் போட்டியிடும் தொகுதிகளின் வேட்பாளர் பட்டியலை அறிவித்தனர். இதில் அதிமுக சார்பில் ராமநாதபுரம் தொகுதிக்கு வேட்பாளராக அறிவிக்காததால் அதிருப்தியடைந்த அதிமுக_வின் முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் திமுக_விற்கு ஆதரவு தெரிவிக்க போவதாக தெரிவித்துள்ளார்.இன்று மாலை அண்ணா அறிவாலயத்தில் முக.ஸ்டாலினை சந்தித்து ஆதரவு தெரிவிக்க இருப்பதாக தெரிய வந்துள்ளது.
ராஜகண்ணப்பன் 1991_ஆம் ஆண்டு அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ராஜகண்ணப்பன் 1996_ஆம் ஆண்டு வரை அமைச்சராக பொறுப்பேற்றார். பின்னர் அதிமுக_வில் இருந்து விலகி மக்கள் தமிழ் தேசியம் என்ற கட்சியை தொடங்கினார். பின்னர் அவர் திமுக_விற்கு ஆதரவு தெரிவித்தார்.பின்னர் 2006_ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் இளையான்குடியில் போட்டியிட்டு வென்றார். இதையடுத்து அதிமுக_வில் இணைந்து அதிமுக இரு அணியாக இருந்த போது ஓ.பன்னீர்செலவத்திற்கு ஆதரவாக இருந்து வந்தார்.இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் இடம் கிடைக்காததால் அதிருப்தியடைந்த ராஜகண்ணப்பன் திமுக_விற்கு ஆதரவு அளித்துள்ளார்.