சொத்து குவிப்பு வழக்கில் சிறைத்தண்டனை பெற்று வந்த சசிகலா தண்டனை காலம் முடிவடைந்து கடந்த 27 ஆம் தேதி விடுதலையானார். இதையடுத்து முன்னதாக உடல்நிலை குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்க்கப்பட்டார். இந்நிலையில் துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் இளைய மகன் ஜெயபிரதீப் திடீரென்று சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் தமிழக அரசியலில் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் சசிகலாவுக்கு ஜெயபிரதீப் ஆதரவு கொடுத்ததற்கு பின்னணியில் ஓபிஎஸ் இருப்பதாக கூறப்படுகிறது. துணை முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட ஓபிஎஸ் இதுவரை சசிகலாவுக்கு எதிராக ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அதிமுகவில் இருந்து நீக்கவும் வலியுறுத்தவில்லை. 2018ல் தினகரன் இரகசியமாக ஓபிஎஸ் சந்தித்தார். அப்போதே ஈபிஎஸ்-ஐ முதல்வர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு ஓபிஎஸ்-ஐ மீண்டும் முதல்வராக்கும் திட்டம் இருந்ததாக சொல்லப்படுகிறது இதன் நீட்சியாக தான் ஜெயபிரதீப் சசிக்கு ஆதரவு தெரிவித்துள்ளாராம்.