பிரிட்டன் பிரதமர் தேர்தலுக்கான போட்டியில் இருக்கும் ரிஷி சுனக்கிற்கு நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் மைக்கேல் கோவ் ஆதரவு தெரிவிப்பதாக கூறியிருக்கிறார்.
பிரிட்டனில் பிரதமர் தேர்தலில் போட்டியிடும் ரிஷி சுனக்கிற்கு எதிராக களமிறங்கி இருக்கும் லிஸ் டிரஸ் உண்மை நிலவரங்களிலிருந்து விடுப்பு எடுத்தது போன்று இருக்கிறது என்று மைக்கேல் கோவ் தெரிவித்திருக்கிறார். மேலும், ரிஷி சுனக் அமல்படுத்திய வரிகள் அவரால் விரும்பி கொண்டுவரப்பட்டது இல்லை எனவும் கொரோனா காலகட்டத்தால் விதிக்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது என்றும் தெரிவித்திருக்கிறார்.
இது மட்டுமல்லாமல், பிரதமர் பதவியில் இருக்க ஒரு நபருக்கு என்ன தேவை என்று தனக்கு தெரியும் என்று கூறியிருக்கும் மைக்கேல் கோவ் அந்த தகுதி ரிஷி சுனக்கிடம் இருக்கின்றன என்று தெரிவித்திருக்கிறார்.