செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி, எங்களது கழக ஒருங்கிணைப்பாளர், அருமை அண்ணன் ஓபிஎஸ் அவர்களின் தலைமையேற்று கிருஷ்ணகிரி மாவட்டம், நாமக்கல் மாவட்டம், பெரம்பலூர் மாவட்டம், அரியலூர் மாவட்டம், இந்த இடங்களில் இருந்தெல்லாம்… ஜேசிடி பிரபாகரனும் இங்கே தான் இருந்தார். அனைத்து இடங்களிலிருந்தும், ஆயிரக்கணக்கான நிர்வாகிகள் கலந்து கொண்டு, கழகத்தில் இணைந்ததும் ஆதரவு தெரிவித்தார்கள்.
வழக்கறிஞர் பிரிவும் அதேபோல நூற்றுக்கணக்கானோர் இங்கே இணைந்து ஆதரவை தெரிவித்தார்கள். அஜய் ரத்தினம் சினிமா நடிகர்கள் அவர்கள், அண்ணன் தலைமையேற்று கழகத்தில் இணைந்துள்ளார்.இதிலிருந்து என்ன தெரிய வருகிறது என்று சொன்னால் அண்ணன் ஓபிஎஸ் அலை வீசுகிறது தமிழகம் எங்கும்,
தொடர்ந்து இதேபோன்று அனுதினமும் தமிழகத்தில் பல பகுதிகளிலிருந்து அண்ணன் தலைமையேற்று, நிர்வாகிகளும் தொண்டர்களும் வந்து கொண்டே இருக்கிறார்கள். நாளைய பொழுது நல்ல பொழுதாக இருக்கும் மகிழ்ச்சியை தரும்.80 பேர் தான் ஓபிஎஸ்_ஸிடம் இருப்பதாக ஜெயக்குமார், எடப்பாடியை சொல்லிக் கொள்கிறார். முதலில் என்ன சொன்னார் ? யாருமே எங்களிடம் இல்லை என்று சொன்னார்.
ஜெயக்குமார் வந்து எவ்வளவு சொன்னாலும் திருந்த மாட்டேங்குறார். நான் அன்னைக்கே கூறினேன் 4800 கோடி ஊழல், சிபிஐ விசாரணை டெல்லியில் சென்று வேணாம், இங்கே வந்து கதவை அடித்ததற்கு, ரோட்டில் கலாட்டா நடந்தது என்று சும்மா பொய் சொல்லி புகார் கொடுத்து, இங்கு சிபிஐ விசாரணை வேண்டும் இப்படியெல்லாம் பேசக்கூடிய, ஒரு நாகரத்தின் கீழே இறங்கி பேசக்கூடிய நபராகத்தான் ஜெயக்குமாரை நாங்கள் பார்க்கிறோம்.
நாங்கள் எவ்வளவு சொல்லிட்டோம், தினமும் செய்தியாளர்களை பார்ப்பது, ஏதாவது பொய்யை சொல்வது, தேவையில்லாமல் பேசுவது, இதையெல்லாம் செய்து கொண்டிருக்கிறார். இப்போது பார்க்கிறார் அல்லவா, இவ்வளவு கூட்டம் எங்கே இருந்து வருகிறது என்று புகழேந்தி கேள்வி எழுப்பினார்.