செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கள்ளகுறிச்சி நிகழ்வுகளில் எடப்பாடி கருத்து சொல்லி இருக்கின்றார், நான் கருத்து சொல்லி இருக்கின்றேன். போலீஸ் விசாரணையில் இருக்கிறது, அதனால் நாங்கள் ஏற்கனவே சிபிஐ விசாரணை வேண்டுமென்று தான் கேட்டோம், சிபிஐ விசாரணை வைத்து அந்த தாயினுடைய நியாயமான கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும்.
ஒரு தாய் அவர்களுக்கு இந்த அரசாங்கத்தின் மீது திருப்தி இல்ல, காவல்துறை மீது நம்பிக்கை இல்லை. அவர்களே என்ன செய்கிறார்கள் ?நாங்கள் கேட்கின்ற கேள்விக்கு பதில் சொல்லுங்கள் என்கிறார்கள் ? ஆனால் அரசு இதுவரைக்கும் பதில் சொல்லவில்லையே, எங்களை பொறுத்தவரையில் தாயினுடைய கேள்விக்கு நியாயமான பதில் கிடைக்கவில்லை என்றால் சிபிஐ விசாரணை வேண்டும் என்று தான் கேட்கிறோம்.
கள்ளக்குறிச்சி விவகாரத்தில் அதிமுக நிர்வாகி ராஜசேகர் பள்ளிக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றசாட்டு உள்ளது என்ற கேள்விக்கு பதிலளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் யாரு அவரு ? கட்சி விரோத நடவடிக்கையில் யாரு ஈடுபட்டாலும் சரி, கட்சி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும். அவரு யாருனே தெரியாது. என்னை பொறுத்தவரையில் கூட்டணி குறித்து எந்த முடிவும் நாங்கள் செய்ய முடியாது என விளக்கம் அளித்தார்.