அதிமுக கட்சியில் தற்போது ஒற்றை தலைமை பிரச்சனையானது விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், எடப்பாடி பழனிச்சாமிக்கு ஓபிஎஸ் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறார். அதோடு பாஜக மேலிடமும் உடனடியாக கட்சியை ஒன்று படுத்துங்கள் என்று அழுத்தம் கொடுத்தம் வருகிறது. இபிஸ்-க்கு இந்த 2 பிரச்சனைகள் போதாது என்று தற்போது புதிதாக கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர் எதிர்ப்பு குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளார்களாம். அதாவது பாஜக மேலிடம் ஓபிஎஸ், சசிகலா, இபிஎஸ் டிடிவி தினகரன் நான்கு பேரும் சேர்ந்து இருந்தால்தான் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற முடியும் என்று கூறியிருக்கிறது.
ஆனால் இதற்கு இபிஎஸ் சம்மதம் தெரிவிக்கவில்லை. அண்மையில் கூட டெல்லி சந்திப்பின் போது உள்துறை அமைச்சர் அமித்ஷா எடப்பாடி பழனிச்சாமியிடம் ஒற்றை தலைமையை ஏற்க முடியாது தேர்தலை மனதில் வைத்துக்கொண்டு அனைவரும் ஒன்றுபட்டு செயல்படுங்கள் என வலியுறுத்தியுள்ளார். இதனால்தான் அமித்ஷாவை சந்தித்த பிறகு எடப்பாடி பழனிச்சாமியின் முகத்தில் கவலை தாண்டவமாடியதாக கூறப்படுகிறது. அதன் பிறகு சமீபத்தில் தமிழகத்திற்கு வந்த மத்திய அமைச்சர் பீயூஸ் கோயலை சந்தித்த இபிஎஸ் ஒற்றை தலைமையை அதிமுகவில் கொண்டு வருவதற்கு உதவி செய்யும்படி கேட்டதாக கூறப்படுகிறது.
அதோடு தேர்தல் ஆணையம் மற்றும் நீதிமன்றத்திலும் ஓபிஎஸ் தனக்கு தொல்லை கொடுக்காதவாறு செய்யுமாறு மத்திய அமைச்சரிடம் பியூஷ் கோயலிடம் கேட்டுள்ளாராம். ஆனால் அமித்ஷா கூறியதை போன்று பியூசும் அனைவரும் கட்சியில் ஒன்றாக இணைந்து செயல்படுங்கள் என்று கூறியுள்ளார். இதனால் இபிஎஸ் மன அழுத்தத்தில் இருக்கும் நிலையில், சமீபத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தின் போது கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் இபிஎஸ் இடம் நீங்கள் இறங்கி வாருங்கள் தலைவா இல்லையெனில் சிவ சேனா கட்சிக்கு நேர்ந்தது தான் நமக்கும் நேரும் என்று கூறியுள்ளாராம்.
ஒருவேளை தேர்தல் சமயத்தில் கட்சியின் சின்னத்தை முடக்கி விட்டால் நம்மால் போட்டியிடுவது மிகவும் கடினமான ஒன்றாக மாறிவிடும் என்றும் மூத்த தலைவர் கூறியுள்ளார். இதனால் கடும் அப்சட்டான ஓபிஎஸ் தனக்கு நெருக்கமானவர்களிடம் என்னுடைய ஆதரவாளர்களை நம்பி தான் நான் டெல்லி மேலிடத்தையும் ஓபிஎஸ்யும் தொடர்ந்து எதிர்த்து வருகிறேன். ஆனால் அவர்களை இப்படி கூறும்போது என்ன செய்வது என்று தெரியவில்லை என புலம்பியுள்ளாராம். மேலும் இபிஎஸ்-க்கு தொடர்ந்து 3 பக்கமும் இருந்து அழுத்தம் அதிகரிப்பதால் விரைவில் அதிமுக கட்சியில் ஓபிஎஸ்-ஐ இணைப்பதற்கு இபிஎஸ் இறங்கி வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.